அகமதாபாத் நகரில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியுள்ளார். இதனால் அந்தச் சிறுவனுக்கு மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உணவுக்குழாயில் பிளாஸ்டிக் பொம்மை சிக்கியிருப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுவனின் உயிரைப் பாதிக்கும் வகையில் இருந்த அந்தப் பொம்மையை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

தற்போது அந்தச் சிறுவன் அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் சிறிய அளவிலான பொம்மைகளைக் கொடுக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என இந்தச் சம்பவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.