இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு வினோதமான காணொளி செம வைரலாகி வருகிறது. ஆசை ஆசையாய் ஒரு வீட்டை கட்டி, இன்னும் அந்த செங்கல் சுவர்களுக்குப் பூச்சு வேலை (Plastering) கூட முடிக்காத நிலையில், அந்த வீட்டை ஆயிரக்கணக்கான தேனீக்கள் மொத்தமாகக் ஆக்கிரமித்துள்ளன. சும்மா சொல்லக்கூடாதுங்க, வீட்டின் ஒவ்வொரு தூணையும், ஜன்னல் ஸ்லாப்புகளையும், ஏன் ஒரு சின்ன மூலை முடுக்கைக் கூட விட்டுவைக்காமல் தேனீக்கள் பிரம்மாண்டமான கூடுகளைக் கட்டி அடைத்துள்ளன. கட்டுமானப் பணி பாதியில் இருக்கும் அந்த வீடே ஒரு பெரிய ‘தேனீக்களின் கோட்டை’ போலக் காட்சியளிப்பது பார்ப்பவர்களைப் பீதி அடைய வைத்துள்ளது.
இந்தக் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், “பாவம் அந்த வீட்டின் உரிமையாளர், அவர் நிலைமையை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது” என்று நெட்டிசன்கள் பலரும் கவலையுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “லட்சக்கணக்கில் காசை கொட்டி, கஷ்டப்பட்டு செங்கல் செங்கலாகப் பார்த்து கட்டிய வீட்டில், இப்படி ஒரு ஆக்கிரமிப்பா?” என்றும், “இனி இந்தத் தேனீக்களை அப்புறப்படுத்திவிட்டு வேலையைத் தொடருவதற்குள் உரிமையாளருக்குப் போதும் போதும் என்றாகிவிடும்” என்றும் இணையவாசிகள் ஆதங்கப்படுகின்றனர். இந்த வினோதச் சம்பவம் 2026-ன் மறக்க முடியாத ஒரு வைரல் வீடியோவாக மாறியுள்ளது!
