பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சோஹல்பிரீத் சிங் சித்து என்ற 18 வயது இளைஞர், வெளிநாட்டு மோகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு தனது கிராமத்திலேயே பால் பண்ணை அமைத்து மாபெரும் சாதனை படைத்துள்ளார். வெறும் 15 வயதில் ஒரு எருமையுடன் தொடங்கிய இவரது பயணம், இன்று 120 கால்நடைகள் கொண்ட பண்ணையாக வளர்ந்துள்ளது. மாதம் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து, அதில் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டி வரும் இவர், “பெற்றோர் பணத்தை வெளிநாடு செல்ல செலவழிப்பதை விட, சொந்தத் தொழிலில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்” என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

​சுமார் 42 ஏக்கர் நிலத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களைத் தாங்களே பயிரிடுவதால் செலவு குறைந்து லாபம் கூடுகிறது. தற்போது 12-ம் வகுப்பு முடித்துள்ள சோஹல்பிரீத், தனது பண்ணையை இன்னும் அறிவியல் ரீதியாக மேம்படுத்த கால்நடை மருத்துவப் படிப்பில் சேரவும் திட்டமிட்டுள்ளார். வெளிநாட்டு வேலைதான் வெற்றி என நினைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், கடின உழைப்பும் திட்டமிடலும் இருந்தால் சொந்த ஊரிலேயே கோடீஸ்வரர் ஆகலாம் என்பதற்கு இந்த 18 வயது இளைஞர் ஒரு சிறந்த முன்னுதாரணம்