தேனீக்கள் மிகவும் ஆபத்தானவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை எப்போதும் கூட்டமாகவே வாழும் என்பதால், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தேன் எடுப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

ஒரு சில தேனீக்கள் கடித்தாலே சாதாரண மனிதர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிடும். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் எந்தவித பயமும் இன்றி, வெறும் கைகளால் தேன் கூட்டை கலைப்பதைக் காண முடிகிறது.

நூற்றுக்கணக்கான தேனீக்கள் அவர்களின் உடல் முழுவதும் மொய்த்துக் கொண்டிருந்தாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தேன் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “பாதுகாப்பு கவசம் இல்லாமல் உங்களால் இதைச் செய்ய முடியுமா?” என்ற கேள்வியுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
<a href=”http://

“>
சிலர் இது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியப்படுகின்றனர், மற்றவர்கள் இது தைரியத்தை விட தேனீக்களின் சுபாவம் பற்றிய பாரம்பரிய அறிவையும் நுட்பத்தையும் சார்ந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அனுபவம் இல்லாதவர்கள் இதை முயற்சிப்பது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் பலர் எச்சரித்துள்ளனர்.