சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவியின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராய்கார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் நீண்ட நாட்களாகத் தொடர்பில் இருந்த அந்தப் பெண், தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
அதன்படி கணவனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, அதைத் தற்கொலை போல நாடகமாடினார். தனது கணவரை அவரே மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று தப்பிக்க முயன்றார், ஆனால் அவர் செய்த கொடூரத்தை அங்கிருந்த அவரது குழந்தைகளே பார்த்துள்ளனர்.
வழக்கை விசாரித்த போலீசாரிடம், அந்தப் பெண்ணின் குழந்தைகளே உண்மையை உடைத்தனர். “அம்மாதான் அப்பாவுக்கு விஷம் கொடுத்தார்” என்று குழந்தைகள் அழுதபடி வாக்குமூலம் அளித்ததைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
कोरबा- आशिक के चक्कर में पत्नी ने पति को बच्चों के सामने पिला दी जहर, बच्चों ने साफ तौर पर कहा— मम्मी ने ही पापा को जहर खिलाया है। @KorbaDist @korbapolice #Loveaffair #Chhattisgarh pic.twitter.com/odNAholky8
— Haribhoomi (@Haribhoomi95271) January 30, 2026
“>
குழந்தைகளின் சாட்சியத்தின் அடிப்படையில் அந்தப் பெண்ணை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இந்தச் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலனைப் பிடிக்க தனிப்படை ராய்கார் விரைந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
