வனப்பகுதி ஒன்றில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று வாலிபர் ஒருவரின் காலை இரும்பு பிடிபோல இறுக்கிப் பிடித்துள்ள நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. பொதுவாக மலைப்பாம்புகள் தனது இரையை எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு இறுக்கி நசுக்கி கொன்றுவிடும் தன்மை கொண்டவை. இந்த வீடியோவில், ஒரு ராட்சத மலைப்பாம்பு வாலிபரின் காலைச் சுற்றி வளைத்துக்கொண்டு விடாப்பிடியாக இருப்பதைப் பார்த்து பார்ப்பவர்களின் ரத்தம் உறையச் செய்கிறது.

அந்த வாலிபரோ சற்றும் பதறாமல், மலைப்பாம்பின் வாயை தனது கைகளால் பிடித்தபடி அதன் பிடியில் இருந்து விடுபட போராடுகிறார். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், “இவ்வளவு பெரிய மலைப்பாம்பு தாக்கும்போது இவ்வளவு நிதானமாக இருப்பது ஆச்சரியம்” என்றும், “கத்தியால் குத்தினால் பாம்பு விட்டுவிடுமா?” என்றும் நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் ஒரு நிபுணர் என்பதால், சரியான கணக்கீடுகளுடன் செயல்பட்டு நூலிழையில் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.