இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கார் நிறுத்துமிடத்தில் நின்றபடி செல்போனில் பேசும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அந்தப் படத்தில், நெதன்யாகு பயன்படுத்தும் ஐபோனின் பின்பக்க கேமராக்கள் அனைத்தும் அடர்த்தியான சிவப்பு நிற டேப் கொண்டு ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட இஸ்ரேலின் பிரதமரே, தனது போன் கேமராவை இப்படி ‘லோ-டெக்’ முறையில் மறைத்திருப்பது சர்வதேச அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
創価学会や統一協会信者などにオルグした信者が新人信者を手懐ける際に用いる統合失調症的洗脳手法の一環でスマホなどのカメラや音声の穴をテープでベタベタ塞いで、グーグルアプリなどの情報アプリを消去して、外部からの情報認識を遮断して、信者の洗脳を可能にしていくやり方とも似ているな。 https://t.co/MfChYH4S5o
— ぞうさん★🐘💨ぱおん♪ おしゃべりラジオ通信☆Messenger Radiot☆森の動物市民™ (@zo_sanz) January 28, 2026
பெகாசஸ் போன்ற உளவு மென்பொருட்கள் மூலம் ஹேக்கர்கள் ரகசியமாக கேமராவை இயக்கி வீடியோ எடுக்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பை உறுதி செய்யவே அவர் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவரது உதவியாளர்களின் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ஈரான் போன்ற எதிரி நாடுகளின் உளவு நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே இந்த அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
