விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் இந்திய அரசியலிலும் திரையுலகிலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக பெங்களூருவிலிருந்து கிளம்பிய நடிகை சவுந்தர்யா, விமானம் ஓடுதளத்திலிருந்து எழும்பிய சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்ததில் உயிரிழந்தார்.
இந்தச் சோகம் அடங்குவதற்குள், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி , லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி. பாலயோகி, காங்கிரஸ் இளம் தலைவர் சஞ்சய் காந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா எனப் பல ஆளுமைகளை இத்தகைய கோர விபத்துகள் நம்மிடமிருந்து பறித்துக்கொண்டன.
இந்த சம்பவம் சமீபத்தில், 2026 ஜனவரி 28 அன்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அவர் மறைந்த செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. இதற்கு முன்பாக 2021-ல் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது தேசத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக நிகழும் இத்தகைய விபத்துகள், நாட்டின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்களின் வாழ்வை மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுகின்றன என்பது வருத்தத்திற்குரிய உண்மை.
