​சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்குவதோடு பெரும் உத்வேகத்தையும் அளித்து வருகிறது. ஒரு காலை இழந்த நிலையிலும், பிறரின் உதவியை எதிர்பார்க்காமல் தன் சுய உழைப்பில் வாழ நினைக்கும் ஒரு மாற்றுத்திறனாளி, கனமான சிமெண்ட் மூடைகளைத் தன் முதுகில் சுமந்து வேலை செய்கிறார்.

உடல்நிலை ஒத்துழைக்காத போதும், பிழைப்புக்காக அவர் காட்டும் அந்த அதீத உழைப்பு, “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்ற பொன்மொழிக்குச் சான்றாக அமைந்துள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், “சாதிக்கத் துடிப்பவர்களுக்கு ஊனம் ஒரு தடையல்ல, மன உறுதிதான் மூலதனம்” என அவரைப் பாராட்டி வருகின்றனர்