பெங்களூரு டிக்கன்சன் சாலையில் குடியரசு தினத்தன்று நடந்த சாலை வன்முறை சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.என். பிரவீன் என்பவர் தனது காரில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சிக்னலை மீறி வந்து மோதப்பார்த்துள்ளார்.
இதை பிரவீன் தட்டிக்கேட்டபோது, “என் பைக், என் இஷ்டம்” என்று அந்த நபர் ஆவேசமாகப் பேசியுள்ளார். பிரவீன் இதைத் தனது மொபைலில் வீடியோ எடுக்க முயன்றபோது, அந்த நபர் அவரைத் தாக்க முயன்றதோடு காரைத் துரத்திச் சென்று ஜன்னல் வழியாக அடிக்கவும் முயற்சி செய்துள்ளார்.
தொடர்ந்து அந்த நபர் பிரவீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னால் இருந்த வாகனங்கள் அதிகப்படியாக ஹாரன் ஒலிக்கத் தொடங்கியவுடன், அந்த நபர் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றார்.
A road rage incident occurred on #DickensonRoad in #Bengaluru on #RepublicDay, as reported by local resident M. N. Praveen. He claimed that a two-wheeler rider jumped a traffic signal and nearly collided with his vehicle.
When confronted, the rider refused to apologize and… pic.twitter.com/6POE1ZENQn
— Hate Detector 🔍 (@HateDetectors) January 26, 2026
“>
இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பெங்களூரு போன்ற நெரிசலான நகரங்களில் அதிகரித்து வரும் இதுபோன்ற அநாகரீகமான மோதல்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
