கடந்த 2019 முதல் சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவிய ஒருவரால், திமுக கூட்டணியை அசைக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

“பிரதமரே உங்கள் பக்கத்தில் ஒருத்தர் உட்கார்ந்திருந்தாரே, அவர் வெறும் பழனிசாமியா? இல்லை, அவர் ‘தி கிரேட்’ பத்து தோல்வி பழனிசாமி!” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2019-லிருந்து இன்றுவரை ஒரு வெற்றியைக்கூடக் காணாத மாவீரர் இவர் என்றும், இப்படி ஒரு ‘பெயில்யர்’ (Failure) கும்பல் ஒன்று சேர்ந்து, கொள்கையால் இணைந்திருக்கும் திமுக கூட்டணியை வீழ்த்தப் போவதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது எனச் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் என்.டி.ஏ (NDA) கூட்டணி அரசு அமையப்போவதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருவதையும், இது நடக்காத ஒன்று என்பதையும் தனது பேச்சில் முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.