உருவத்தில் தன்னைவிடப் பெரிய மானை, வானத்தில் பறந்தபடியே தூக்கிச் சென்ற கழுகின் பலம் இணையத்தை அதிர வைத்துள்ளது. காட்டுயிர்கள் உலகில் வலிமையானது எது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்று.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், புல்வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மானை, வானத்திலிருந்து மின்னல் வேகத்தில் வந்த கழுகு ஒன்று தனது கூர்மையான நகங்களால் கவ்விப் பிடிக்கிறது.

கழுகின் நகங்கள் மானின் முதுகில் ஆழமாகப் பதிந்ததால், மானால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. அடுத்த சில நொடிகளில், அந்த ராட்சத கழுகு தனது அசுர பலத்தைப் பயன்படுத்தி, அந்த மானைத் தூக்கிக்கொண்டு வானத்தை நோக்கிப் பறக்கிறது.

பொதுவாகக் கழுகுகள் முயல், பாம்பு போன்ற சிறிய விலங்குகளையே வேட்டையாடும். ஆனால், ஒரு முழு மானையே தூக்கிச் செல்லும் இந்த ‘கோல்டன் ஈகிள்’ (Golden Eagle) வகை கழுகின் வீரம் காண்போரைக் கண்ணிமைக்க விடாமல் செய்துள்ளது. @QuantumAlteredX என்ற எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து வியந்து வருகின்றனர்.