தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணி முடிவுகளை அறிவித்துள்ள நிலையில் இன்னும் சில கட்சிகள் மட்டும் தான் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. அவர்களும் தை மாதம் முடிவதற்குள் தங்கள் முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டசபை தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.
தங்கள் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளின் பெயர்களை திமுக தலைமையிடம் நடிகர் கமல்ஹாசன் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் திமுக கூட்டணியில் ஏற்கனவே விசிக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறிய நிலையில் தற்போது கமல்ஹாசனும் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளது முதல்வர் ஸ்டாலினுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
