தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், திமுக மீண்டும் அதே பழைய கூட்டணியுடன் களம் காண்கிறது.

இந்த நிலையில் முன்னதாக அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக ராஜ்ய சபா சீட்டு விவகாரத்தில் அதிருப்தி காரணமாக அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தங்களது கூட்டணியிலேயே நீடிப்பதாக கூறி வருகிறார்.

அதே நேரத்தில் தேமுதிக இன்னும் கூட்டணி குறித்து அறிவிக்காத நிலையில் தை மாதம் முடிவதற்குள் தங்கள் நிலைபாட்டை கூறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பேசிய பிரமலதா விஜயகாந்த் தேமுதிக எங்களது குழந்தை போன்றது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தேமுதிக எங்களுடைய குழந்தை, அவங்களுக்கு என்ன எப்போது நல்லது பண்ணனும் என்று ஒரு அம்மாவாக எனக்கு நன்றாக தெரியும். எனக்கு கடமைகள் மற்றும் பொறுப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.