உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில், தன்னைத் தொடர்ந்து கேலி செய்து வந்த வாலிபருக்கு பள்ளி மாணவி ஒருவர் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வாலிபர் தினமும் பைக்கில் வந்து, அந்த மாணவியைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஐ லவ் யூ’ என்று கூறிவிட்டு தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி, ஒருநாள் அந்த வாலிபர் வந்தபோது அவரைத் துரத்திப் பிடித்து நடுரோட்டிலேயே சரமாரியாகத் தாக்கினார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மாணவி தனது செருப்பால் அந்த வாலிபரை அடிப்பதுடன், ஆத்திரத்தில் அவரைத் தூக்கித் தரையில் போட்டு மிதிப்பதும் பதிவாகியுள்ளது. அங்கிருந்த பொதுமக்களும் அந்த வாலிபருக்குத் தக்க பாடம் புகட்டினர்.

“>

 

அந்த வாலிபர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும், மாணவி விடாமல் அவரை வெளுத்து வாங்கினார். துணிச்சலுடன் செயல்பட்ட அந்த மாணவியின் செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.