விழுப்புரம் அருகே மகளின் தீராத நோயைக் கண்டு மனமுடைந்த தந்தை, மகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியையே உறைந்து போகச் செய்துள்ளது.
கண்டமங்கலம் அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன், ஆஸ்துமா கோளாறால் அவதிப்பட்டு வந்த தனது மகள் சுமலதாவின் துயரத்தைப் பொறுக்க முடியாமல் இந்தக் கொடூர முடிவை எடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்த சுமலதாவிற்கு, பல சிகிச்சைகள் அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மகள் மூச்சு விட முடியாமல் திணறுவதைக் கண்டு மனவேதனையில் இருந்த கோதண்டராமன், இன்று விரக்தியின் உச்சத்துக்கே சென்று கத்தியால் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
பின்னர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவரைக் கண்டு மனைவி அலற, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தற்போது கோதண்டராமன் உயிருக்குப் போராடிய நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
