திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவுக்கான விளம்பரப் பேனர்களில், உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ரவிமனோகரனின் பெயர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விதிமீறல் குறித்துத் தகவல் அறிந்த த.வெ.க அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ‘அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் அவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதிதான்’ என்பதைச் சுட்டிக்காட்டி, அரசு மரபுகளைப் பின்பற்றத் தவறிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
அதுமட்டுமின்றி, நாகரிக அரசியலுக்கு இலக்கணமாக, அமைச்சர் ரமேஷ் நேராக அதிமுக எம்.எல்.ஏ ரவிமனோகரனிடம் சென்று, ‘தவறா நெனச்சுக்காதீங்க, இனிமேல் இதுபோல் ஒருபோதும் நடக்காது’ என நேரில் வருத்தம் தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அரசு விழாக்களில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படும் தற்போதைய அரசியல் சூழலில், த.வெ.க அமைச்சரின் இந்த முதிர்ச்சியான அணுகுமுறையும், அதிகாரிகளுக்கு விடுத்த எச்சரிக்கையும் பழனி வட்டாரத்தில் மட்டுமன்றி, தமிழக அரசியல் களத்திலும் தற்பொழுது வியப்பையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.”
“தவறா நெனச்சுக்காதீங்க இனிமே இப்படி நடக்காது..”
பழனி முருகன் கோவில் பெருந்திட்டப் பணிகளின் திறப்பு விழா பேனர்களில் விடுபட்டிருந்த உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரன் பெயர்… திருக்கோவில் அதிகாரிகளை உடனடியாக நேரில் அழைத்து எச்சரித்து எம் எல் ஏ-விடம் வருத்தம்… pic.twitter.com/8XOjnWMpwJ
— Polimer News (@polimernews) June 8, 2026
“>
