சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திராவிட இயக்கம் என்பது வாசிப்பு மற்றும் அறிவின் மூலமாக வளர்ந்த இயக்கம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
49 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெறும் இந்த புத்தகக் காட்சி, தமிழகம் முழுவதற்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்வதாகவும், சென்னை இந்தியாவின் பதிப்பகத் தலைநகரமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பேரறிஞர் அண்ணா உலகத் தலைவர்களின் மேலான கருத்துகளை கடிதங்கள் வழியாக மக்களுக்குக் கொண்டு சேர்த்ததை நினைவு கூர்ந்தார்.
அண்ணா அன்று பற்ற வைத்த அந்த அறிவுத்தீ இன்றுவரை பிரகாசமாக எரிந்து கொண்டிருப்பதாகவும், அதனால்தான் அவர் சொன்ன ‘தீ பரவட்டும்’ என்ற வாசகத்தைக் கேட்டால் இன்றும் சிலர் பயந்து நடுங்குகிறார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
