உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் டிக்கர் கிராமத்தில், ராம்சுமேர் சிங் (45) என்ற விவசாயி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அதிகாலை தனது வயல்வெளியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
இந்த கொலையை விசாரித்த காவல்துறையினர், அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ராம்சுமேரின் மனைவிக்கு வேறொரு பெண்ணுடன் ஓரினச்சேர்க்கை உறவு இருந்ததாகவும், இதற்கு கணவர் தடையாக இருந்ததால் அவரைத் தீர்த்துக்கட்ட மனைவி முடிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தனது ரகசிய உறவு வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில், அவர் தனது கணவரைக் கொல்லத் திட்டமிட்டுள்ளார். இந்தக் கொலையைச் செய்ய தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 60,000 ரூபாய் பணத்தை கொலைக்கான கூலி ஆக அந்தப் பெண் கொடுத்துள்ளார்.
திட்டமிட்டபடி, ஜனவரி 13-ஆம் தேதி இரவு ராம்சுமேர் வயலில் உள்ள மோட்டார் அறைக்கு உறங்கச் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கூலிப்படையினர் அவரை கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் உரையாடல்களைக் கொண்டு இ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரைப் பிடித்த போலீஸார், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனைவியைக் கைது செய்தனர்.
#UttarPradesh | In #Fatehpur district, lesbian Renu Devi hired a man to murder her husband, Sumer Singh, who was a hindrance to her love. Renu was having an affair with Malti Devi from her village. Her husband found out about this and banned them from meeting.
1/2 pic.twitter.com/LuumSZlXJb— Siraj Noorani (@sirajnoorani) January 18, 2026
“>
தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
