சேலம் மாவட்டம் கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்தவர் தவசியப்பன். இவரது மனைவி கனகவல்லி. கனகவல்லி ஒரு தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தபோது, அங்கு பணியாற்றிய செந்தில் என்பவருடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் கனகவல்லியின் மகன் கார்த்திக்கும், கணவர் தவசியப்பனுக்கும் தெரியவரவே, குடும்பத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பலமுறை சொல்லியும் கனகவல்லி கேட்காததால் ஆத்திரமடைந்த மகன் கார்த்தி, தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயைக் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக உடலைத் தீயிட்டு எரித்து, குழிதோண்டிப் புதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ரகசியத் தகவல் கிடைத்ததும், கன்னங்குறிச்சி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இறுதியில் கனகவல்லியின் கணவர் தவசியப்பன், மகன் கார்த்தி மற்றும் அவர்களது நண்பர்கள் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
