சர்க்கரைக்கு மாற்றாக, உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருளாக நாம் வெல்லத்தை (குடிசைத் தொழில் வெல்லம்) கருதுகிறோம். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, வெல்லம் தயாரிக்கும் போது கடைப்பிடிக்கப்படும் அசுத்தமான முறைகளை அம்பலப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், கரும்பை அரைக்கும் இயந்திரத்தில் மிகவும் அசுத்தமான முறையில் கரும்புகள் போடப்படுகின்றன. கரும்புச் சாறு வெளியேறிச் செல்லும் பாதைகளில் எவ்விதத் தூய்மையும் இல்லை. அதன் பிறகு, ஒரு பெரிய கொப்பரையில் சாறு ஊற்றப்பட்டுத் தீ மூட்டப்படுகிறது.
சாறு கொதிக்கும்போது மேலே வரும் அழுக்கு நுரைகளை அகற்றிவிட்டு, அதில் சில நிறமிகள் (Colors) சேர்க்கப்படுகின்றன. எந்தவொரு சுகாதார விதிமுறையும் இல்லாமல், வெறும் கைகளால் அந்தப் பாகு கையாளப்படுகிறது.
இறுதியாக அச்சுக்களில் ஊற்றி வெல்லமாக மாற்றப்படுகிறது. “இது ஆரோக்கியம் அல்ல, ஆரோக்கியமான புற்றுநோய்” என ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
