அதிவேகமாக வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யாரும் துணையின்றி தனியாகத் தவித்த இரண்டு பச்சிளம் குழந்தைகளைச் சமயோசிதமாகச் செயல்பட்டு மீட்ட அமெரிக்க இளைஞர் ஜான் பிரிட்டிங்ஹாம் என்பவரின் செயல் இணையதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இருபுறமும் வாகனங்கள் சீறிப்பாயும் சாலையின் நடுவே திக்கற்று நின்ற குழந்தைகளைக் கண்ட ஜான், உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்தி அவர்களைப் பத்திரமாக மீட்டுக் கரை சேர்த்தார்.

ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட ஜானை உலகெங்கிலும் உள்ள மக்கள் நிஜ நாயகன் என்றும் கடவுளின் தூதுவர் என்றும் போற்றி வருகின்றனர். அதேவேளையில், சிறு குழந்தைகளைக் கவனிப்பதில் பெற்றோர்கள் ஒரு கணம் கூட கவனக்குறைவாக இருக்கக் கூடாது என்பதற்கு இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.