நமக்கெல்லாம் வாழ்க்கையில் எத்தனையோ குறைகள் இருக்கலாம், பெற்றோரிடம் ஆயிரம் புகார்கள் இருக்கலாம். ஆனால், இந்த 12 வயது சிறுவனைப் பார்த்தால், நம் கவலைகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன், முழங்கால்களால் ஊர்ந்து சென்று, தன் தலை மீது விறகுக் கட்டுகளைச் சுமந்து கொண்டு செல்கிறான்.
இந்த வயதில் சக நண்பர்களுடன் ஓடிப் பிடித்து விளையாட வேண்டிய அந்தச் சிறுவன், வறுமையின் பிடியில் சிக்கித் தன் குடும்பத்திற்காக உழைக்கும் காட்சி பார்ப்பவர் கண்களைக் குளமாக்குகிறது.
हो सकता है आपको अपने जीवन से बहुत सारी शिकायतें हों, हो सकता है आपको अपने माता-पिता से भी बहुत शिकायतें हों, लेकिन इस 12 वर्ष के बच्चे को देखिए… आप अपनी सभी शिकायतें भूल जाएंगे❤️ pic.twitter.com/NRDb46bLo5
— 𝙼𝚛 𝚃𝚢𝚊𝚐𝚒 (@mktyaggi) January 15, 2026
அவனது முகத்தில் தெரியும் வலி, சோர்வு மற்றும் குடும்பப் பொறுப்பு ஆகியவை சமூகத்தின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. “வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதற்கு இந்தச் சிறுவனே சாட்சி” என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
