பொதுவாகச் சாலையில் ஒரு லாரி கவிழ்ந்தாலோ அல்லது அதிலிருந்து பொருட்கள் கீழே விழுந்தாலோ, மக்கள் அதை அள்ளிச் செல்வதையே பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், சீனாவில் நடந்த இந்தச் சம்பவம் “மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை” என்பதை உரக்கச் சொல்லியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு லாரி வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்த ஏராளமான பெட்டிகள் சாலையில் சிதறுகின்றன.

நொடிப் பொழுதில் சாலை முழுவதும் பொருட்கள் பரவிக் கிடக்கின்றன. ஆனால், அங்கே ஒரு அதிசயம் நடந்தது. அங்கிருந்த மக்கள் யாரும் அந்தப் பொருட்களைத் தூக்கிக்கொண்டு ஓடவில்லை.

மாறாக, சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தாங்களாகவே முன்வந்து அந்தப் பொருட்களை ஒன்று திரட்டி, மீண்டும் அந்த லாரியிலேயே ஏற்றிக் கொடுத்தனர்.

28 நொடிகள் கொண்ட இந்த வீடியோ, “திருடுவதை விட உதவுவதே மேலானது” என்ற பாடத்தைச் சொல்லிக் கொடுத்துள்ளது. சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை ரசித்துப் பகிர்ந்து வருகின்றனர்.