தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விமர்சிப்பது போல ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தவெக கட்சித் துண்டு அணிந்த ஒரு நபரிடம், பழைய வீடியோ ஒன்றைக் காட்டி கேள்வி கேட்கப்படுகிறது. அதில் த்ரிஷா சிஎம் ஆக வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதற்குப் பதில் அளித்த அந்த நபர், “எம்ஜிஆர் எப்படி ஜெயலலிதாவை வைத்திருந்தாரோ, அதேபோல எங்கள் தலைவர் விஜய்யும் த்ரிஷாவை வைத்திருக்கிறார்” என்று அதிரடியாகக் கூறுகிறார்.

​உடனே கேள்வி கேட்டவர், “எம்ஜிஆர் ஜெயலலிதாவை கட்சியில் வைத்திருந்தார், விஜய் த்ரிஷாவை கட்சியிலா வைத்திருக்கிறார்?” என்று மடக்க, அந்த நபர் சற்றும் யோசிக்காமல், “இப்போது பிரைவேட்டாக வைத்திருக்கிறார், பின்னாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்று சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியுள்ளார். இந்த வீடியோ விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பையும், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.