எக்ஸ் (X) வலைதளத்தில் சமீபத்தில் வெளியான காணொளி ஒன்று, நூறு வயதைக் கடந்த தம்பதியினரின் மாறாத அன்பைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில், வயதான தாத்தா ஒருவர் தனது மனைவிக்காக உணவை எடுத்து வருகிறார். சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் பாட்டியிடம், ஒரு குழந்தையைப்போல உரிமையோடு அதட்டி அவர் உணவை ஊட்டிவிடும் காட்சி பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழச் செய்கிறது.

​நூறு வயதைக் கடந்தும் ஒருவருக்கொருவர் காட்டும் இந்த அளவற்ற அக்கறை, சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது. இந்தக் காணொளியைக் கண்ட நெட்டிசன்கள், “காலம் கடந்தும் மாறாத உண்மையான காதல் இதுதான்” எனப் பாராட்டித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.