ஆன்மீகம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் மலிந்து வரும் இந்தக் காலத்தில், பிரேமானந்த் மகாராஜ் சொன்ன அந்த ஒரு வார்த்தை ஒட்டுமொத்தப் போலிச் சாமியார்களுக்கும் சரியான சவுக்கடி. அவரிடம் வந்த பக்தர் ஒருவர், “சாமி எனக்கு உடம்பு சரியில்லை, ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கேட்க, அதற்கு அவர் கொடுத்த பதில் தான் இப்போது இணையதளங்களில் வைரல். “உடம்புல கோளாறுன்னா ஆஸ்பத்திரிக்குத் தான் போகணும், டாக்டரைப் பாக்கணும். அதை விட்டுட்டு மந்திரம் ஓதினாலோ, வேதம் படிச்சாலோ உடல் பிரச்சனையைச் சரி செய்ய முடியாது” என்று முகத்தில் அறைந்தாற்போலப் பேசியிருக்கிறார்.

​இந்தக் காலத்துல பல சாமியார்கள் “நான் தொட்டா சரியாயிடும், விபூதி போட்டா விபத்து வராது”னு வியாபாரம் பண்ணிட்டு இருக்குறப்போ, இவ்வளவு நேர்மையா உண்மையை ஒத்துக்கிட்டது பெரிய விஷயம். “உடம்பைப் பார்த்துக்க வேண்டியது மருத்துவர்கள் வேலை, மனசைத் தேற்ற வேண்டியது ஆன்மீக வேலை” அப்படின்ற தெளிவு இந்த மகாராஜ்கிட்ட இருக்குறதைப் பார்த்து பலரும் வியந்து போயிருக்காங்க.