உண்மையான வெற்றி என்பது நாம் சம்பாதிக்கும் பணத்தில் இல்லை, நம்மை வளர்த்தவர்களை நாம் எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
இதனை நிரூபித்துள்ளார் ஹரியானாவைச் சேர்ந்த அங்கித் ரானா என்ற இளைஞர். துபாயின் மிக உயரமான கட்டிடத்தில் உள்ள இன்பினிட்டி பூலுக்குத் தனது தாத்தா மற்றும் பாட்டியை முதன்முறையாக அழைத்துச் சென்று அசத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், துபாயின் கட்டிடங்களுக்கு நடுவே மேகங்களுக்கு அருகே இருப்பது போன்ற அந்த நீச்சல் குளத்தில், தாத்தாவும் பாட்டியும் எந்தவித தயக்கமும் இன்றி ஜாலியாக நீச்சலடித்து மகிழ்கின்றனர்.
View this post on Instagram
“எப்படி இருக்கிறது?” என அங்கித் கேட்க, “ரொம்ப நல்லா இருக்கு, புது அனுபவமா இருக்கு” என அவர்கள் மழலை மாறாத சிரிப்புடன் பதிலளிக்கின்றனர்.
“பாட்டிக்கு இதுதான் முதல் முறை” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, பலரது இதயங்களையும் நெகிழ வைத்துள்ளது. “நிஜமான சொர்க்கம் இதுதான்”, “இந்த தாத்தா, பாட்டி கொடுத்து வைத்தவர்கள்” என நெட்டிசன்கள் இந்த பேரனின் பாசத்தைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
