உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண், வேலை நிமித்தமாகத் தனியாகத் தங்கியிருந்தபோது அவரது 40 வயது உறவினர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த அத்துமீறல் தொடர்ந்து நீடித்துள்ளது. இதுகுறித்து வெளியே சொன்னால், பெண்ணின் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் பொய்யான புகார்களை அளிப்பேன் என்று அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டலைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து இணையதளத்திலும் அந்த நபர் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், அந்த நபரை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.