தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமைச்சர் பெரியசாமி முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் என கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நேற்று அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின்போது பலர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும் திமுக ஏற்கனவே கூட்டணி பெரும்பான்மையுடன் இருக்கும் நிலையில் தற்போது தொடர்ந்து கட்சியில் இணைந்து வருவது தேர்தல் நேரத்தில் திமுக பலத்தை காண்பிப்பதாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
