சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1,760 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,06,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14,313 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,504 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 287 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,87,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.