கரூர் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஜன. 12) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிறார்.

உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், ஏற்கனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரசார வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணியளவில் விஜய்யிடம் விசாரணை தொடங்குகிறது. இதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை 6 மணியளவில் தனி விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

“>

 

சி.பி.ஐ. தலைமையகம் முன்பாகத் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரள வாய்ப்புள்ளதால், டெல்லி போலீசார் அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விஜய்யிடம் கேட்கப்பட வேண்டிய 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் தயாராக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த விசாரணை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.