தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், போலி வாக்குறுதிகளைக் கூறி மக்களை திமுக ஏமாற்றி வருவதாக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெளிவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
2023-ல் 99 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறிய முதலமைச்சர், பிறகு 72 சதவீதம் என்றும், தற்போது 80 சதவீதம் என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்றப்படாத திட்டங்களைக் கணக்குக் காட்டி மக்களைத் திசைதிருப்பும் நாடகத்தை திமுக அரங்கேற்றி வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் வழங்கி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு 2026 தேர்தலில் ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் தனது பதிவில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
