தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ய 12 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளார்.
தி.மு.க, அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகளும், நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வரும் சூழலில், த.வெ.க தலைவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் எனப் பல தரப்பினரையும் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளையும் கருத்துகளையும் கேட்டறிய உள்ளனர்.
மக்களிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் ஜே.சி.டி.பிரபாகர், ஏ.ராஜ்மோகன், மயூரி உள்ளிட்ட 12 முக்கியப் பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர். மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மக்கள் குறைகளை அறிந்து அதற்கேற்பத் திட்டங்களை வகுப்பதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
