தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக கட்சி ஆரம்பித்த இரண்டு வருடத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது இந்தியா முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்க்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது மதிமுக கட்சியும் விஜய் பக்கம் நகர்வதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரையும் நேரில் சென்று சந்தித்தார். அதோடு திமுக கூட்டணியில் இருந்த ஆதரவு கொடுத்தும் அந்தக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார்.
இந்த நிலையில்தான் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விஜயை ஆறு மாதங்களுக்கு விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நிலையில் திமுக கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பது குறித்து பொதுக்கூட்டத்தில் முடிவு செய்வோம் என்றார். அதன் பிறகு எம்பி துரை வைகோ துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டியிட வேண்டிய நிலை வந்தது என கூறிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் நாங்கள் திமுகவிடம் கடைசி நேரம் வரை எவ்வளவு மன்றாடி கேட்டும் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிர்பந்தித்ததாக கூறினார்.
கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஒரு கூட்டணியில் இருக்கும் நிலையில் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது இந்த ஒரு விஷயத்திற்காக எப்படி கூட்டணியை விட்டு வெளியே வர முடியும் என்பதால் தான் நாங்கள் அதற்கு சமரசமாகி விட்டுக் கொடுத்தோம் என்றார். தேர்தல் ஆணையம் 10 வருடங்களுக்கு மேலாக சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் ரிஜிஸ்ட்ரேஷனை ரத்து செய்யும் என அறிவித்துள்ள நிலையில் இனி வரும் தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது உறுதி என்றார். மேலும் சமீப காலமாகவே மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அந்த கட்சியின் தலைவர்களும் அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே பேசி வருகின்றனர்.
