மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக, ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த பர்சா ராம் என்பவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு இரண்டு கைகளும் இல்லை; ஒரு கை முழுமையாகவும், மற்றொன்று பாதியாகவும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இருப்பினும், அவர் மற்ற வீரர்களை விட அதிக வேகத்துடன் வாலிபால் விளையாடும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது கால்களால் பந்தை லாவகமாகத் தூக்கிப் போட்டு அவர் விளையாடும் விதம், உடல் குறைபாடுகளை ஒரு தடையாகவே கருதாத அவரது தன்னம்பிக்கையை பறைசாற்றுகிறது.
சுமார் 41 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. “உறுதியான எண்ணம் இருந்தால் உடல் பலவீனம் ஒரு பொருட்டே இல்லை” என நெட்டிசன்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
मिलिए बाड़मेर निवासी परसा राम जी से..
जिन्होंने दुनिया को बताया कि अगर हौसले बुलंद हों, तो शरीर की कमजोरी भी कोई मायने नहीं रखती।
वह अपने दोनों हाथ न होने के बावजूद शानदार तरीके से वॉलीबॉल खेलते हैं।
यह वीडियो हम सभी के लिए एक बड़ी #प्रेरणा है। ❤️🫡 pic.twitter.com/0dVRhoenU4
— Bhupendra Singh Rathore (@bs_rupawat) January 8, 2026
“>
இரண்டு கைகள் இருப்பவர்களே இவ்வளவு துல்லியமாக விளையாடுவது கடினம் என்றும், பர்சா ராமின் விடாமுயற்சி அனைவருக்கும் ஒரு சிறந்த பாடம் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
