மும்பையைச் சேர்ந்த திவ்யா தவ்டே என்ற இளம்பெண், தனது தாத்தா பாட்டியை முதல்முறையாகக் கடலுக்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வாழ்நாள் முழுவதும் கடலைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அந்த முதிய தம்பதியினர், முதல்முறையாக நேரில் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கடற்கரையின் வெள்ளை அலைகள் தங்கள் பாதங்களைத் தொட்டபோது, அவர்கள் ஒரு தெய்வத்தைக் காண்பது போலக் கடலைத் தொழுது வணங்கிய காட்சி பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் ரசித்துப் பாராட்டி வருகின்றனர். “இது வெறும் பயணம் அல்ல, அவர்களின் வாழ்நாள் கனவை நனவாக்கும் ஒரு அனுபவம்” என திவ்யா பதிவிட்டுள்ளார்.
அந்த வயதான தம்பதியினர் கைகோர்த்து அலைகளை ரசிப்பதும், அவர்கள் முகத்தில் மின்னும் மழலைத்தனமான புன்னகையும் நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது.
View this post on Instagram
“>
“இதுதான் இணையத்தில் இன்று பார்த்த மிக அழகான வீடியோ” எனப் பலரும் தங்களது அன்பைப் பொழிந்து வருகின்றனர்.
