உத்தரப் பிரதேச மாநிலம் சத்னாவிலிருந்து வாரணாசி நோக்கிச் சென்ற ரயிலில், தனது கைப்பையைத் திருடிச் சென்ற திருடனைப் பிடிக்க இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் பிரயாக்ராஜ் அருகே ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, ஏசி பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் அலைபேசி மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையைத் திருடிக்கொண்டு தப்பியோடினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Payal Gupta (@guptainji)

திருடனைப் பிடிக்க காலணி கூட அணியாமல் துரத்திச் சென்ற அந்த இளம்பெண், திருடன் ரயிலிலிருந்து குதித்ததைக் கண்டு தானும் துணிச்சலுடன் கீழே குதித்துள்ளார். இருப்பினும் திருடன் தப்பிவிட்ட நிலையில், ரயிலில் இருந்த மற்ற பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பின்னரே அந்தப் பெண் மீண்டும் ரயிலில் ஏற முடிந்தது.

ரயில்வே ஊழியர்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்று கண்ணீருடன் அந்தப் பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உபி காவல்துறை இது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.