கூகுள் தேடுபொறியில் ‘6-7′ அல்லது ’67’ என்று தட்டச்சு செய்தால் திரை அதிரும் அல்லது குதிக்கும் ஒரு புதிய அம்சம் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது கூகுள் நிறுவனம் வழங்கியுள்ள ஒரு வேடிக்கையான ‘ஈஸ்டர் எக்’ வசதியாகும்.
தற்போது ‘ஜென் ஆல்பா’ தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமாக உள்ள ஒரு மீம் கலாச்சாரத்தை கௌரவிக்கும் விதமாக இந்தத் திரையதிர்வு விளைவு சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற சுவாரசியமான அம்சங்கள் குறிப்பிட்ட முக்கிய நிகழ்வுகள் அல்லது இணையப் போக்குகளின் போது கூகுளில் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம்.
🧠 What is the “6-7 meme”?
The “6-7 meme” is an internet trend that spread mainly on TikTok, Instagram Reels, YouTube Shorts, and other social video platforms.
It isn’t a phrase with real meaning — it became popular because of how it sounds and how creators used it.
📍 Where… pic.twitter.com/BCek09F5Dh
— baby Darling (@Babydarling_111) December 27, 2025
“>
இந்த ‘6-7’ மீம், ஸ்க்ரில்லா என்ற கலைஞரின் பாடலில் வரும் வரிகளில் இருந்து உருவானது. குறிப்பாக, கூடைப்பந்து வீரர் லாமெலோ பால் தொடர்பான வீடியோ எடிட்களில் இந்த “சிக்ஸ்-செவன்” என்ற சத்தம் பயன்படுத்தப்பட்ட பிறகு, அது மிக வேகமான இணையப் போக்காக மாறியது.
மேலும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வைரல் கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் வகையில், கூகுள் இந்தத் திரையதிர்வு விளைவை உருவாக்கியுள்ளது. உங்கள் கணினி அல்லது மொபைல் திரையில் இந்த எண்ணைத் தட்டச்சு செய்து நீங்களும் இந்த விந்தையான அனுபவத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.
