மும்பை வொர்லி பகுதியில் அமைந்துள்ள ட்ரம்ப் டவர்ஸில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் மாத வாடகை குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரவி கேவல்ரமணி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், சுமார் 2,900 சதுர அடி பரப்பளவு கொண்ட 4.5 BHK அபார்ட்மெண்ட் ஒன்றின் வாடகை மாதம் 10 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரீமியம் ரக சமையலறை, மார்பிள் தரைகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த வீடு ஒரு உயர் தளத்தில் அமைந்திருந்தாலும், அதன் மலைக்க வைக்கும் வாடகைத் தொகை பொதுமக்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலவிதமான கிண்டலான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்த கட்டிடம் இருப்பதால், “இந்த வாடகைக்கு மேல் தனிப்பட்ட முறையில் வரிகள் ஏதேனும் விதிக்கப்படுமா?” என நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் சிலர், இவ்வளவு பெரிய தொகைக்கு வாடகை இருந்தும் அதில் பால்கனி வசதியோ அல்லது கடல் காட்சியோ இல்லையே என்று குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் வங்கிக் கணக்கில் உள்ள சொற்பத் தொகையை இதனுடன் ஒப்பிட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருவதால், இந்த 10 லட்சம் ரூபாய் வாடகை விவகாரம் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
