மேற்கு வங்கத்திலிருந்து வாரணாசிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட சுமார் 400 காட்டு கிளிகளை ரயில்வே காவல்துறையினர் அதிரடியாக மீட்டனர். இது தொடர்பாக முகமது ஜாஹித் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் நீண்டகாலமாக பறவைகள் கடத்தலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
🚨 Police RECOVERED 400 wild parrots from Mohammad Zahid, who was travelling by train from West Bengal to Varanasi.
Zahid has been identified as a trafficker; the birds are reportedly worth lakhs of rupees in the international market.pic.twitter.com/MJQPTULLkN
— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 7, 2026
மீட்கப்பட்ட இந்த அரிய வகை கிளிகள் சர்வதேச சந்தையில் பல லட்சம் ரூபாய் மதிப்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், வனத்துறையினர் அந்தப் பறவைகளை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
