பங்களாதேஷில் பொது இடங்களில் இளைஞர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து சமீபகாலமாக காவல்துறையினர் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பூங்கா போன்ற பொது இடங்களுக்கு ஜோடியாக வரும் இளம் வயதினர் “முறையற்ற முறையில்” நடந்து கொள்வதாகக் கூறி, அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் விசித்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள பூங்காக்களில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த ஜோடிகளைப் பிடித்து ஒருவருடைய காதை மற்றவர் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
🚨⚡️In Bangladesh, police carried out campaigns in public parks against what they describe as “inappropriate behavior,” imposing a strange punishment by forcing young men and women to hold each other’s ears.
What do you think about this? pic.twitter.com/D0BYUi0sNB
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) January 7, 2026
சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ தளத்தில் இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், காவல்துறையினர் முன்னிலையில் இளம் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் காதுகளைப் பிடித்துக் கொண்டு தண்டனையை நிறைவேற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த விசித்திரமான மற்றும் சங்கடமான தண்டனை முறை, தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், இளைஞர்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்துவதாகவும் கூறி பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
