கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே தவெக மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

​இந்தச் சூழலில், தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. அந்தச் சம்மனில், வரும் 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது தலைவருக்கே சம்மன் அனுப்பப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.