சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட் (Beirut) மீது இஸ்ரேல் ராணுவம் திடீரென நடத்தியுள்ள பயங்கரத் தாக்குதல் உலக அரங்கில் மாபெரும் விவாதத்தையும் புதிய சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திடீர் வான்வழித் தாக்குதலால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்து பெரும் புகைமூட்டத்துடன் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இஸ்ரேல் தற்பொழுது நடத்தியுள்ள இந்த புதிய தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்காமல் ஈரான் நாடு சும்மா விடாது என்றும், இஸ்ரேலின் இந்த அத்துமீறலுக்குப் பளீச் பதிலடி நிச்சயம் உண்டு என்றும் ஈரான் ராணுவம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி உடன்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இந்த அதிரடித் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக ஈரான் ராணுவம் கொடுத்துள்ள மிரட்டலும் தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
