“என் புருஷனை அடிச்சு கொல்லாதீங்க, தயவுசெஞ்சு அவரை விட்ருங்க, யாராவது காப்பாத்த வாங்க!” என்று நடுரோட்டில் தனது கணவர் கொடூரமாகத் தாக்கப்படுவதைப் பார்த்து அவரது மனைவி அழுதுகொண்டே உதவிக்காகக் கெஞ்சிய நெஞ்சை உலுக்கும் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கடையின் கூரையில் தீரு சௌத்ரி என்ற தொழிலாளி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்தக் கடையின் உரிமையாளருக்கும்பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த சொத்து மற்றும் குடும்பத் தகராறு காரணமாக திடீரென மோதல் வெடித்துள்ளது.

<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Manish kumar (@manishmanawat)

“>

இந்தத் தகராறில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த அப்பாவித் தொழிலாளி தீரு சௌத்ரி கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போதிலும் நீண்ட நேரம் யாரும் தடுக்க முன்வரவில்லை.

பின்னர் ஒரு வாலிபர் தலையிட்டு நிலைமையைச் சமாதானப்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளியின் மனைவி கதறிய இந்தத் துயரக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.