“எங்க காலேஜ் ப்ரொபசர்ஸ் எல்லாம் பயங்கர டாக்சிக், அங்க படிக்கிற பசங்க பார்க்க ரொம்ப மோசமா இருப்பாங்க!” என்று பிரபல மருத்துவக் கல்லூரி மற்றும் சக மாணவர்களைப் பற்றி இன்டர்வியூவில் அவதூறாகப் பேசிய மருத்துவ மாணவி சேஜல் பவாரை கல்லூரி நிர்வாகம் 15 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு படித்து வரும் சேஜல் பவார், ஏற்கனவே ஒரு ‘ நிகழ்ச்சியில் பேசி சர்ச்சையான நிலையில், தற்போது இன்ஃப்ளூயன்சர் திவ்யா ஃபோஃபானி தொகுத்து வழங்கிய ‘ ஷோவில் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

<a href="http://

“>

மால் ஆஃப் இந்தியாவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், “எங்கள் கல்லூரி உடல்களைத் துண்டு துண்டாக வெட்டுவதில் பெயர் பெற்றது, பேராசிரியர்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள், அங்குள்ள பசங்களை டேட்டிங் செய்ய மாட்டேன்” என்று வருங்கால மருத்துவரான சேஜல் பவார் பேசியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அவரை 15 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்பியிருப்பதுடன், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து அதிரடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.