தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படக்குழுவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சென்சார் சான்றிதழ் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுடன் வசூலை பிரித்துக் கொள்வது தொடர்பாக பல சர்ச்சைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்த படத்தின் டிக்கெட் முன்பதிவு சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. மேலும் இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.