நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. முன்னதாக, இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர். இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கவலை எழுந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு (Revising Committee) அனுப்பியது. அங்கு படத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், தற்போது படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கி ரிலீசுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதால், படத்தை வெளியிடுவதற்கான அனைத்துத் தடைகளும் நீங்கிவிட்டன. இதன் காரணமாக, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு படம் திரைக்கு வரத் தயாராகிவிட்டதால், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
