தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ஜனவரி 9-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் தற்போது தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் படம் ரிலீஸ் ஆக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று மதியமே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.