கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்கு அவற்றை பராமரிக்க மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது ஜல்லிக்கட்டு சீசன் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் பேசுகையில், தானும் ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருவதாகவும், தேர்தலுக்குப் பிந்தைய 48 மாதங்களுக்குத் தலா ₹1,000 வீதம் மொத்தம் ₹48,000 பாக்கித் தொகையை தனக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தன்னைப்போலவே தமிழகம் முழுவதும் காளைகளை வளர்க்கும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த உதவித்தொகைக்காக ஆவலோடு காத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
